திமுக கூட்டணி பங்கீடு குறித்து அமைச்சர் சிவசங்கர் முக்கிய தகவல்
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில், கட்சிக்குள் தனக்கிருக்கும் சிக்கல்களை மறைப்பதற்காக திமுக மீது தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
டெல்லிக்கு சென்றுவிட்டு வந்த பின்னரே ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதி என்பதை அறிவிக்கும் நிலையில் இருக்கிறார்.
கூட்டணிக்கு தலைமை அமித்ஷா தான் என்பதை கூட்டணியில் இருப்பவர்களே உணர்த்தி வருகின்றனர்.
பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் அளித்ததோடு, கூட்டணி கட்சிகளும் தாமரை சின்னத்தில் போட்டியிட வழிவகுத்துள்ளார்.
தமிழகத்தில் நோட்டாவுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தாமரைக்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்திருக்கிறார்.
எதிர்காலத்தில் பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை தான் இவருக்கும் ஏற்பட போகிறது என விமர்சித்தார்.