30ம் தேதி திமுகவில் இணைகிறாரா அழகிரி? ஸ்டாலின் சம்மதம் தெரிவித்ததாக தகவல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது, ஒவ்வொரு கட்சியும் மக்களின் வாக்குகளை சேகரிக்க சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் முக அழகிரி மீண்டும் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணாநிதி இருந்த போதே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் முக அழகிரி, சமீபத்தில் கூட அவர் தனிக்கட்சி தொடங்குவது குறித்து தொண்டர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். தொண்டர்கள் மீண்டும் திமுகவில் இணையவே விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே முக ஸ்டாலின், தென் மாவட்ட வாக்குகளை கருத்தில் கொண்டு முக அழகிரியை இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டாராம். எனவே வருகிற 30ம் தேதி பிறந்தநாளன்று அழகிரி திமுக வில் இணையலாம் என தெரிகிறது.
இதற்கிடையே சென்னை அறிவாலயத்தில், திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்த பின்னர், அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பீர்களா?' என செய்தியாளர்கள் கேள்விக்கு.
அது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.