திமுக- அதிமுக இருக்கும் வரை இந்த நாட்டில் நல்ல அரசியல் பிறக்காது- சீமான் ஆவேசப் பேச்சு
திமுக - அதிமுக இருக்கும் வரை இந்த நாட்டில் நல்ல அரசியல் பிறக்காது, பிறக்கவும் முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வில்லிவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பிரச்சாரத்தில் சீமான் பேசியதாவது - உதயசூரியன், இரட்டை இலை சின்னங்கள் கொண்ட திமுக, அதிமுக இருக்கும் வரை இந்த நாட்டில் நல்ல அரசியல் பிறக்காது, பிறக்கவும் முடியாது.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்ற தகுதி தவிர வேறு என்ன தகுதி உள்ளது. பார்த்து படிக்கும் போதே பல நூறு தவறுகளை செய்தவர் ஸ்டாலின். ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். உலகத்தின் தலைசிறந்த நாடாக தமிழ்நாட்டை நான் முன்னேற்றிக் கொண்டு போகிறேன் பாருங்கள்.
போட்டுப் பாருங்கள் ஓட்ட... அப்புறம் பாருங்க நாட்ட...
விவசாய சின்னத்திற்கு ஓட்டு போட்டு... எங்களை வெல்ல வையுங்கள்... புதிய ஒரு தேசம் செய்வோம்...
என்று பிரச்சாரத்தில் அனைவரின் கவனத்தை பெறும் வகையில் வாக்குகளை சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில-மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.