கரூரில் திமுக - அதிமுக இடையே மோதல் - காயமடைந்தவரை சந்தித்து கனிமொழி ஆறுதல்!
கரூரில் திமுக - அதிமுக இடையே மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பிலும் 19 பேர் காயமடைந்துள்ளனர். திமுகவினர் மீது நடவடிக்கைக்கோரி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காயமடைந்த திமுகவினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமைனயில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வரும் அவர்களை மாநில மகளிரணிசெயலாளர் கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூர் நகராட்சி மாவடியான் கோயில் தெருவில் நேற்று இரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரத்தில் வாகனத்தில் சென்றார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் இரவு 10 மணிக்கு மேலாகி விட்டதாகக்கூறி அவர் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து திமுக, அதிமுக என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அமைச்சரின் உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுகவினர் 16 பேரும், திமுகவினர் 3 பேரும் காயமடைந்தார்கள். அதிமுகவினர் தனியார் மருத்துவமனையிலும், திமுகவினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிமுகவினர் தாக்கியதில் காயமடைந்த திமுகவினரை மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘முதல்வர் பழனிசாமி தேர்தல் விதிகளை மீறி செயல்படுகிறார் என்றால் அமைச்சர்களும் தேர்தல் விதிகளை மீறி வருகின்றனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்பேன்" என்றார். று குறிப்பிட்டார்.