மாநிலங்களவை தேர்தல்;திமுக,அதிமுக,காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு..!
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்தநிலையில் வேட்பு மனுத்தாக்கல் ஆனாது நிறைவு பெற்றது.அதை தொடர்ந்து இன்று வேட்பு மனு மீதான பரிசீலனையானது இன்று நடைபெற்று வருகிறது.
திமுக தரப்பில் வேட்பு மனு தாக்கல் செய்த கல்யாணசுந்தரம்,ராஜேஷ்குமார்,கீரிராஜன் ஆகிய மூன்று பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அவரிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த அவரின் வேட்பு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிமுக தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்,தர்மர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர் அவர்களின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.வேட்பு மனுக்களை ஜுன் 3 ஆம் தேதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.