திமுக- விசிக கூட்டணி உறுதியானது: ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட திருமாவளவன்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக - விசிக தொகுதி உடன்படிக்கை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது. விசிக தலைவர் திருமாவளவன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 சட்டமன்ற இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த 6 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார்களா அல்லது திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த ஆறு தொகுதிகளும் என்னென்ன என்பதும் பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆறு இடங்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும் அவர்களிடம் மன உளைச்சல் இருந்தாலும் தலைமையின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.