நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கம் - கையெழுத்திட்டார் கே.எஸ்.அழகிரி!

Udhayanidhi Stalin DMK NEET
By Jiyath Nov 03, 2023 08:11 AM GMT
Report

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டார்.   

கையெழுத்து இயக்கம்

கடந்த மாதமே 21ம் தேதி நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கம் - கையெழுத்திட்டார் கே.எஸ்.அழகிரி! | Dmk Against Neet Exam Signed By Ks Alagiri

இதில் முதல் கையெழுத்தாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கையெழுத்தை பதிவு செய்தார். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளை பெறும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

கே.எஸ்.அழகிரி கையெழுத்து

இந்நிலையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கையெழுத்தை பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கம் - கையெழுத்திட்டார் கே.எஸ்.அழகிரி! | Dmk Against Neet Exam Signed By Ks Alagiri

மேலும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, விஜய் வசந்த் எம்.பி. உள்ளிட்ட பல் காங்கிரஸ் நிர்வாகிகளும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டனர்.