‘‘இது போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக அஞ்சாது” : துரை முருகன்
dmk
stalin
murugan
durai
By Jon
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்விற்கு திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் கண்டணம் தெரிவித்துள்ளார் . வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் இது போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக அஞ்சாது என கூறினார்.

அதே சமயம் , ரெய்டுக்கெல்லாம் பயந்திருந்தால் என்றைக்கோ திமுக செத்து போய் புல் முளைத்திருக்கும் என கூறிய துரை முருகன் அரசியல் நோக்கத்தோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாக குற்றம் சாட்டினார்.