திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை! போலீஸ் விசாரணை
திமுக மாநில செய்தி இணை செயலாளர் பிரசன்னா வின் மனைவி மன உளச்சலால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை.
சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் பிரசன்னா, இவர் திமுக வில் செய்தி இணை செயலாளராக பொறுப்பில் உள்ளார். இவருக்கு நதியா (35) என்ற மனைவியும் 3 குழந்தைகளும் இருக்கின்றனர்.
இன்று நதியாவிற்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. மன உளைச்சலில் இருந்து வந்துள்ள நதியா, வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த பிரசன்னா அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கு பரி சோதித்த மருத்துவர்கள் நதியா இறந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.