எதிராக போட்டிக்கு களமிறங்கிய திமுக - அதிமுக..! எந்தெந்த தொகுதிகள் தெரியுமா..?
இன்று திமுக மற்றும் அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் அறிவிப்பு
வரும் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களும், அதிமுக சார்பில் போட்டியிடும் 16 பேர் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் மத்திய அரசை தேர்ந்தெடுப்பதற்கு என்பதற்காக என்றாலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தேர்தல் என்றால், போட்டி இப்போதும் திமுக vs அதிமுக தான். அப்படி இன்று அறிவிக்கப்பட்ட திமுக - அதிமுக வேட்பாளர்களில் நேரடியாக மோதும் 8 பேரை குறித்து தற்போது காணலாம்.
தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்(திமுக) vs ஜெயவர்தன்(அதிமுக)
வடசென்னை - கலாநிதி வீராசாமி (திமுக) vs ராயபுரம் மனோ (அதிமுக),
சேலம் - டி.எம்.செல்வகணபதி (திமுக) vs விக்னேஷ்(அதிமுக)
ஈரோடு - பிரகாஷ்(திமுக) vs ஆற்றல் அசோக்குமார்(அதிமுக)
அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக) vs ஏ.எல்.விஜயன்(அதிமுக),
ஆரணி - எம்.எஸ்.தரணிவேந்தன்(திமுக) vs கஜேந்திரன்(அதிமுக)
காஞ்சிபுரம் (தனி) - செல்வம் (திமுக) vs ராஜசேகர்(அதிமுக)
தேனி- தங்க தமிழ்ச்செல்வன்(திமுக) vs நாராயணசாமி(அதிமுக)