சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விரைவில் வெளிவர இருக்கிறார். சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுகவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா போன்றவர்களால் தமிழக அரசியலில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது என்றும், அதே வேளையில், ஆனால், கட்சி விரோத நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எதற்காக கட்சி துவங்கினார்களோ அந்த நோக்கம் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வருவதால், தமிழக அரசியலிலும் சரி, அதிமுகவிலும் சரி எந்த வித மாற்றமும் ஏற்படாது. சசிகலாவும், அவரது உறவினர்கள் ஆத்திக்கம் இல்லாத அதிமுக என்பதே எங்கள் நிலைப்பாடு.
அதில் சமரசம் என்பதற்கே இடமில்லை. சசிகலாவை சார்ந்தவர்கள் தலையீடு இல்லாமல், கட்சியும், ஆட்சியும் நடத்தப்பட வேண்டும் என்பது பெரும்பாலன தொண்டர்களின் நிலைப்பாடு. அதை நாங்கள் பூர்த்தி செய்து வருகிறோம். சசிகலா குடும்பத்திடம் கோடிகோடியாக பணம் உள்ளது. அதை வைத்து, அவர்கள் செயற்கையாக மாயாஜாலம் செய்யலாம். அதனால், கட்சிக்கு பாதிப்பு இருக்காது.
ஆனால், கட்சி விரோத நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மத்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்திற்கு இன்னும் நிறையே நிதி பெற வேண்டியுள்ளது. அதனால், மாநிலத்தின் நலன் கருதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என விளக்கமும் அளித்தார்.