அதிமுக - திமுக சேர்ந்தால் தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டம்!

Tamil nadu ADMK DMK TVK
By Vinoja May 08, 2026 08:46 AM GMT
Report

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைத்தால் தவெகவின் 108 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக சேர்ந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் சுமார் 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

அதிமுக - திமுக சேர்ந்தால் தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டம்! | Dmk Admk Alliance Rule Will Make Tvk Mla Resign

ஆனால் ஆட்சியமைக்க குறைந்தது இன்றும் 10 தொகுதிகளின் ஆதரவு தேவைப்படுகின்றது. எனவே தவெக ஆட்சியமைப்பதைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக போன்ற எதிர் துருவ கட்சிகள் ஒன்று சேருமா அல்லது கூட்டணி அமைக்குமா என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன.

இந்தச் சூழலில், திமுக, அதிமுக ஆகியவை தனித்தனியாக தங்களது எம்.எல்.ஏ.க்கள் கூட்டங்களை நடத்தின.

இந்நிலையில், திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைத்தால் தவெகவின் 108 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.