70 களில் திமுக எதிர்கொண்ட அரசியலை அழகாக சொல்லியிருக்காங்க : சார்பட்டா பரம்பரைக்கு உதயநிதி பாராட்டு

திமுக எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் குறித்து வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து உதயநிதி தனது ட்விட்டர் பதிவில்: 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள 'சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம்.

அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் – கலைஞர் – கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.

இதில், கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக பசுபதி சார், டான்ஸிங் ரோஸ், வேம்புலி , ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்