திமுகவிலிருந்து திடீரென்று 51 பேர் நீக்கம் – துரைமுருகன் அதிரடி - நடந்தது என்ன?
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் மேலும் 51 பேரை தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
திமுகவிற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து, திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 56 பேர் நேற்று தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் 51 பேரை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைமை ஏற்கெனவே நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. யாரும் சுயேட்சையாக போட்டியிட கூடாது என்று. ஆனால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் இன்று மேலும் 50க்கும் மேற்பட்டோரை கட்சியிலிருந்து திமுக தலைமை தற்காலிக நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
