மறந்துடாதீங்க...திமுக 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குள்ளது ..அண்ணாமலை எச்சரிக்கை..!!

Udhayanidhi Stalin M K Stalin DMK BJP K. Annamalai
By Karthick Sep 13, 2023 01:30 PM GMT
Report

ஆளும் திமுக அரசின் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குள்ளது என்பதை முதல்வர் முக ஸ்டாலின் மறந்துவிட கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

அண்ணாமலை பதிவு 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிஜிஆர் மின்சார முறைகேடு, சத்துணவு முறைகேடு, டிரான்பார்மர் முறைகேடு, சென்னை மெட்ரோ ரயில் முறைகேடு, இடிஎல் உள்கட்டமைப்பு நிறுவன முறைகேடு, போக்குவரத்து ஊழல், நோபல் ஸ்டீல் முறைகேடு, டிஎன்எம்எஸ்சி முறைகேடு, ஹெச்ஆர் & சிஇ முறைகேடு என இன்னும் நிறைய முறைகேடுகள் திமுக ஆட்சியில் நடந்திருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

dmk-11-ministers-has-scam-case--warns-annamalai

மேலும், 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி, ஒரு இலாகா இல்லாத அமைச்சர் (செந்தில் பாலாஜி) வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் சிறையில் இருக்கிறார் என்றும் தான் கூறிய இந்த முறைகேடுகளில் இருந்து மக்களை திசைதிருப்பவே, இந்து தர்மத்தின் மீது உதயநிதியும், தங்கள் கட்சியினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தர்மசங்கடத்திற்கு உள்ளாகி கொள்ளாதீர்கள்  

தொடர்ந்து சிஏஜி அறிக்கை குறித்து துண்டுச்சீட்டில் உள்ளதை அப்படியே படித்து தங்களை நீங்களே தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளாதீர்கள் என திமுகவினரை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். முன்னதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

dmk-11-ministers-has-scam-case--warns-annamalai

அதில், "மத்திய அரசு இமாலய ஊழலை மறைக்க சனாதன பிரச்சினையை கையில் எடுத்துள்ளது என்றும் நாட்டில் இதுவரை நடைபெற்ற எந்த பிரச்சினைக்கும் பதில் சொல்லாத மோடி, இப்போது தனது அமைச்சர்களிடம் சனாதனம் குறித்து தக்க பதில் சொல்லுமாறு கூறியிருக்கிறார் என்றால் சனாதனம் மூலமாக குளிர்காய நினைக்கிறார் என்றே பொருள்" என ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.