இவரு... தேமுதிக தலைவர் விஜய்காந்தா? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவா கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வந்தார்.
இதனையடுத்து, தேமுதிக என்ற கட்சியை உருவாக்கிய விஜயகாந்த் அரசியலில் குதித்தார். முதல் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் தேமுதிக கட்சி வெற்றி பெற்றாலும், அடுத்த தேர்தலில் இக்கட்சி எதிர்க்கட்சியானது.
இவருடன் கூட்டணி வைக்க, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டின. இதற்கிடையில், திடீரென்று விஜயகாந்த்திற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதனால், அவர் அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார். இதனையடுத்து, இவரது கட்சியும் வீழ்ச்சி அடைந்து பொலிவில்லாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தப் புகைப்படத்தில் அவர், உடல் மெலிந்து காணப்படுகிறார்.

இப்புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள், ‘விஜயகாந்த் ஐயாவா இது? நல்ல வட்டமா முகம்.. நிலா மாதிரி இருக்கும். ஆனா கொஞ்சம் கலர்தான் கம்மி. இன்னிக்கு முகமெல்லாம் இப்படி டொக்கு விழுகுற அளவுக்கு அவ்வளவு உடல் நிலை குன்றி இருக்காரு... நலம் பெற்று வர எல்லாம் வள்ள இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என்று வேதனையாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening
Mothers of India: வெறும் 10 மாத வாழ்வு… 5 உயிர்களுக்கு ஒளி தந்து உடல் உறுப்புத் தானத்தில் வரலாறு படைத்த Aalin Manithan
'பிழைக்க மாட்டான்’ என்ற மருத்துவர்கள் - நாய் போல குரைத்த சிறுவன் 22 நாட்களில் மீண்ட அதிசயம்! Manithan