மக்கள் வெள்ளத்தில் கேப்டன் விஜயகாந்த் - தொடங்கியது இறுதி ஊர்வலம்!
தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில் அவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
விஜயகாந்த் மறைவு
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் உடல் இன்று காலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில் தற்போது அவரின் அவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது .
விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம் மக்கள் வெள்ளத்தில் நகர்ந்து வருகிறது. திரையுலகினர், தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என அலைகடலென திரண்டு வழிநெடுகிலும் விஜயகாந்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.