தண்ணீர் பந்தலுக்கு தீ வைப்பு; நல்லதுக்கு காலம் இல்லையா? - தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி

Vijayakanth
By Swetha Subash May 06, 2022 10:37 AM GMT
Report

தேமுதிக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்ததை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில், திமுக, அதிமுக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகளின் சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேமுதிக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், ‘தேமுதிக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த சமூக விரோதிகளுக்கு கடும் கண்டனம். மக்களின் தாகத்தை தணித்த தண்ணீர் பந்தலுக்கு, தீயவர்கள் தீ வைத்த சம்பவம், நல்லதுக்கு காலம் இல்லையோ?! என நினைக்க தோன்றுகிறது.’ என பதிவிட்டுள்ளார்.