யாருமே வேண்டாம்: தேர்தலில் தனித்துப் போட்டியிட தேமுதிக முடிவு
tamilnadu
dmdk
vijayakanth
By Jon
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக டிடிவிதினகரன் தொடங்கியுள்ள அமுமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக இரு கட்சியினரிடையே பேச்சு வார்த்தை நடந்து வந்தது.
இரு கட்சியினரிடையே நடந்த பேச்சு வார்த்தையில் சரியான முடிவு எடுக்கபடாத காரணத்தால் அமமுகவுடன் பேச்சு வார்த்தையினை நிறுத்திக் கொண்டது தேமுதிக. இதனால் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது தேமுதிக.
தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது உண்மைதான் ,இன்னும் சில நாட்களில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தினகரன் கூறியிருந்தது குறிப்பிடதக்கது.