விருகம்பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியா: வெளியான பரபரப்பு தகவல்
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக, பாஜகவுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது.
இதனால் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில்முடிவு எட்டப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தேமுதிக, தனித்து போட்டியிட முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.
அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ், நமது முதல்வர் கேப்டன், நமது சின்னம் முரசு என இணையத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.