தேமுதிகவுக்கு 13 சீட்டுகள் தான் கொடுப்போம்- கறாராக பேசும் அதிமுக
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இன்னும் கையெழுத்தாகவில்லை. முதலில் தேமுதிக 41 சீட்டுகள் கேட்டன. பின்னர் படிப்படியாக குறைத்து 23 தொகுதிகளுக்கு கீழிறங்கி வந்தது. ஆனால் அதிமுக அந்த அளவுக்கு கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதனால் பேச்சுவார்த்தை இழுபறியில் சென்று கொண்டிருக்கிறது. இன்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனையடுத்து, அதிமுக 13 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கறாராக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தேமுதிக அதிமுக கூட்டணிக்கிடையே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.