தேமுதிக-வுக்கு என்ன தகுதி இருக்கிறது? முதல்வர் ஆவேசம்
தேமுதிக-வினர் பக்குவம் இல்லாத அரசியல் நடத்துவதாக வெளிப்படையாக விமர்சித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக விலகுவதாக அறிவித்துவிட்டது, இன்று வரையிலும் கூட தனித்து போட்டியிடுகிறதா? அல்லது கூட்டணி அமைக்கிறதா? என்பது முடிவாகவில்லை.
அதிமுக-வில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்கவில்லை என்றும், மரியாதையாக கூட நடத்தவில்லை எனவும் தேமுதிக பல விமர்சனங்களை முன்வைத்தது. இந்நிலையில் தேமுதிக குறித்த கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக-வுக்கு பக்குவம் இல்லை, அந்த கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.