’தேமுதிகவுக்கு இன்று தான் தீபாவளி, அதிமுக டெபாசிட் இழக்கும்’ கூட்டணியை முறித்துக்கொண்ட விஜய்காந்த்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக - தேமுதிக இடையே ஆன பேச்சுவார்த்தை ஒரு தீர்வு எட்டப்படாமல் இழுபறியிலே நீடித்து வந்தது கூட்டணி பேச்சுவார்த்தையில் விரைவில் ஒரு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்கவில்லை என தேமுதிகவினர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
— Vijayakant (@iVijayakant) March 9, 2021
இதற்குப் பிறகு தேமுதிக என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்பது நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சுதீஷ், “தேமுதிகவினருக்கு இன்று தான் தீபாவளி, அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். கே.பி முனுசாமி அதிமுகவிற்காக இல்லாமல் பாமகவுக்காக வேலை செய்கிறார்” என்றுள்ளார்.