யாருடன் கூட்டணி? பேச்சுவார்த்தையில் இழுபறியால் அதிருப்தியில் தேமுதிக
2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
கூட்டணி கட்சிகள், தேர்தல் அறிக்கை, தொகுதி பங்கீடு என திமுக, அதிமுக கட்சிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவும், டிடிவி தினகரனும் இணைந்துள்ளனர்.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ராமதாஸ் தலைமையிலான பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இக்கட்சியுடன் கூட்டணி அமைக்க விசிக மறுத்த நிலையில், திமுக அமைதியாக இருக்கிறது.
கடும் அதிருப்தியில் தேமுதிக
இதுஒருபுறம் இருக்க, தாங்கள் கேட்ட தொகுதிகளை தராமல் இருப்பதால் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
பாமக-வுக்கு இணையாக தொகுதிகளை கேட்டதாகவும் அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே திமுக-வும் அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை தருவதாகவே கூறியிருக்கிறது.
தேமுதிக 15 தொகுதிகளை கேட்டதாகவும், திமுக 6 தொகுதிகள் மட்டுமே தருவதாகவும் கூறியிருக்கிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம் தேமுதிக.
