பிப்ரவரி 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேமுதிக கொடி ஏற்ற வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
தேமுதிக
பிப்ரவரி 12-ம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வெள்ளி விழா 25-ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு ஒட்டுமொத்த கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் சிறப்பாககொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி கடந்த 2000-ம் ஆண்டு நமக்காக மூவர்ண கொடியை நமது தலைவர் கேப்டன் அவர்கள் அறிமுகப்படுத்தினார். மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கிய பின், அதை கழக கொடியாக மாற்றி அந்த கொடிநாளை தமிழக முழுவதும் ஆண்டுதோறும் விழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் .
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மூவர்ண கொடியின் வர்ணங்கள் மூலம் நமது கழகத்தின் கொள்கைகளை, சனாதனம்,சமதர்மம், சமூகநீதி, சமசிந்தனையை பறைசாற்றுகின்ற ஒரு கொடியாகவே நமக்கு நமது தலைவர் அளித்தார்.ஜாதி, மத, மொழி வேறுபடு இல்லாமல், அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, தரமான மருத்துவம்,
வெள்ளி விழா
வறுமை கோட்டிற்கு கீழ் மக்கள் இல்லாத நிலை, வளமான தமிழகத்தை நமது புரட்சி தீபம் மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை தந்து, அனைவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், விவசாயம், படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, லஞ்சம்,
ஊழல் இல்லாதா நேர்மையான வெளிப்படையான ஆட்சி போன்ற எண்ணற்ற புரட்சிகராமான கொள்கைகளையும் கொடி அறிமுகப்அன்றே நமக்கு உறுதிசெய்திருக்கிறார். அனைத்து மாவட்டம், பகுதி, நகரம் ஒன்றியம், பேரூர், ஊராட்சி கிளைகள், அனைத்து கிராமப்புற கிளை கழக பகுதிகளில் பழைய கொடிகளை அகற்றிப்,
புதுக்கொடிகளை ஏற்றி, கழக கொடிகள் இல்லாத இடத்தில் புதுக்கொடிகளை அமைத்து வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு தேமுதிக கொடியை தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஏற்றிட வேண்டும் என அந்த கடித்ததில் தெரிவித்துள்ளார்.