தேமுதிக-விற்கு முரசு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
election
dmdk
Logo
murasu
By Jon
தேமுதிக கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்து வருகின்றது.

இந்த நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவை மாநில தேர்தலில் போட்டியிட முரசு சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேமுதிக கட்சி தொடங்கியதிலிருந்து முரசு சின்னத்தில் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.