வீடு திரும்பினார் விஜயகாந்த்..!! மருத்துவமனை அறிக்கை!! மகிழ்ச்சியில் தொண்டர்கள்..!!

Vijayakanth Tamil nadu DMDK
By Karthick Dec 11, 2023 04:34 AM GMT
Report

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

விஜயகாந்த்

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில் கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். உடல் நிலை கோளாறு ஏற்பட அவர் கொஞ்சம் கொஞ்சமாக நேரடி களத்தில் இருந்து ஒதுங்க, தேமுதிகவும் ஓட்டு அரசியலில் பின்தங்கி இருக்கின்றது.

dmdk-leader-vijayakanth-discharged-from-hospital

நீண்ட காலமாகவே உடல்நல பிரச்சனை உள்ள விஜயகாந்த் கடந்த 18-ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். அவரை குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை, அவருக்கு அடுத்த 14 நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்றும், அதன் பிறகு விஜயாகாந்த் வீடு திரும்புவார் என குறிப்பிட்டனர்.

வீடு திரும்பினார்

அதனை தொடர்ந்து தான் பல சந்தேகத்திற்கு செய்திகள் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வெளியாக துவங்கின. அதனை தெளிவுப்படுத்த பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தான் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

dmdk-leader-vijayakanth-discharged-from-hospital

இந்நிலையில், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.