தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் - தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்..!
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்.
விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக கடந்த மாதம் 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய நிலையில் கடந்த 11ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் விஜயகாந்த் மீண்டும் மருத்துவாமணையியல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை அலுவலகம் தெரிவித்தது. மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் விஜயகாந்திற்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது.
காலமானார்
இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்து வருவதால் அப்பகுதியில் போலீஸ் பாதிகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
.