தேமுதிக வரலாற்றில் முதன்முறையாக... திமுக கூட்டணியில் இணைந்தது
அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த தேமுதிக, 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக-வுடன் கைகோர்த்துள்ளது.
தேமுதிக கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து திமுக கூட்டணியில் இணையாத தேமுதிக தற்போது முதன்முறையாக இணைந்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்போது, அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, துணை முதலமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது,
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தீர்கள். அதற்கு விடை கிடைத்துவிட்டது.
திமுக-வுடன் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டிலேயே அமைய வேண்டிய கூட்டணி தற்போது அமைந்திருக்கிறது, தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.