தேமுதிகவின் லட்சணம் தான் போன தேர்தலிலே தெரியுமே- அமைச்சர் ஜெயக்குமார்

minister election jayakumar
By Jon Mar 09, 2021 01:50 PM GMT
Report

அதிமுகவை கடுமையாக விமர்சித்து வரும் தேமுதிகவை, அமைச்சர் ஜெயகுமார் தேமுதிகவின் லட்சணம்தான் போன தேர்தலில் தெரியுமே என்று கூறியிருக்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால், கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது. இது குறித்து அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், நன்றி மறந்து எப்போதும் தேமுதிக பேசக்கூடாது. தேமுதிகவினர் பேசுவதை விட என்னாலும் வெளுத்துக்கட்ட முடியும். கூட்டணி தர்மம் என்ற அடிப்படையிலேயே மவுனமாக இருக்கின்றோம். தேமுதிக பலம் கடந்த தேர்தலிலேயே தெரிந்துவிட்டது.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் தேமுதிகவிற்குதான் பாதிப்பு தவிர எங்களுக்கு இல்லை. அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றார்.