பிரேமலதா கொடுத்த விளக்கம் - அதிமுகவின் அழைப்புக்காக காத்திருக்கும் தேமுதிக?
அதிமுகவின் அழைப்புக்காக காத்திருப்பதாக தேமுதிகவினர் தெரிவித்துள்ளனர்.
தேமுதிக கூட்டணி
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மறுத்துள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் வதந்திகளை பரப்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
பேச்சு வார்த்தை
இதனையடுத்து அதிமுகவுடன் 3-வது கட்ட பேச்சு வார்த்தையை நடத்த தேமுதிக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேமுதிகவினர் கூறுகையில் "அதிமுகவின் அழைப்புக்காக காத்திருக்கிறோம்.
அவர்கள் அழைத்ததும் 3-வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெறும். தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இன்னும் 2 நாட்களில் 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.