தேமுதிக யாருடன் கூட்டணி? உறுதிசெய்த பிரேமலதா
தேமுதிக மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு மகத்தான கூட்டணியை அமைக்கும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மகத்தான கூட்டணி
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் (ஜன.13) சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழர் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்தனர்.

தொடர்ந்து, பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, மியூசிகல் சேர் உள்ளிட்ட பல போட்டிகளும் நடத்தப்பட்டன. பின்னர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார்.
பிரேமலதா அப்டேட்
அப்போது பேசிய அவர், “தை பிறந்தால் வழி பிறக்கும் என மாநாட்டில் தெரிவித்தது போல, விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். 2026 சட்டமன்றத் தேர்தல் மக்களுக்கு நன்மை பயக்கும் மாபெரும் வெற்றியாகவும்,
மாபெரும் ஆட்சியாகவும் அமையும். இதற்காக, தேமுதிக மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு மகத்தான கூட்டணியை அமைக்கும். தற்போது வரை திமுகவும், அதிமுகவும் கூட்டணியை இறுதி செய்யவில்லை என்பதால்,
நாமும் சிந்தித்து நல்ல தெளிவான முடிவை எடுக்க வேண்டும். கூட்டணி தொடர்பாக, எங்கள் தரப்பில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து நல்ல முடிவை எடுப்போம்.
எந்தெந்த தொகுதியில் தேமுதிக போட்டியிடும் என்பது தொடர்பாக கூட்டணி அமைந்தவுடன் முடிவு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.