இறங்கி வந்த எடப்பாடி; தேமுதிகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை - எத்தனை சீட்?
அதிமுக - தேமுதிக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக - தேமுதிக
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தலைவர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லம் தேடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது.
பொண்னு பார்க்க வந்தபோ செருப்பு கூட இல்லாம..எங்க ஹனிமூனே ஷூட்டிங்லதான் - மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்
3 தொகுதிகள்
இந்நிலையில், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. தேமுதிக நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 7 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டுவதால் இழுபறி ஏற்பட்டு உள்ளதாம்..
பாஜகவுடன் கூட்டணி சேராத பட்சத்தில் அதிமுக - தேமுதிக கூட்டணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் 2 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.