தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற தேமுதிக, அமமுக தலைமையிலான அணியில் இணைந்தது . அமமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் தேமுதிக வெளியிட்டது.
விருத்தாசலம் தொகுதியில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவரது மகன் விஜயபிரபாகரன் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோரும் போட்டியிடவில்லை.
கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். சேலம் மேற்கு தொகுதியில் அழகாபுரம் மோகன் ராஜ், பல்லாவரத்தில் அனகை முருகேசன் போட்டியிடுகின்றனர்.