சைக்கிளில் சென்றே வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர்

people vote dmdk bicycle karur
By Jon Apr 04, 2021 04:07 AM GMT
Report

கரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் தங்கராஜ் வீடு வீடாகச் சைக்கிளில் சென்று முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேமுதிக மற்றொரு கூட்டணிக் கட்சியான அமுமுக நேரடியாக களம் காண்கிறது. இந்த நிலையில் கரூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் தங்கராஜ் இன்று கரூர் மத்திய பகுதிக்கு உட்பட்ட பாரதியார் தெரு முத்து ராஜபுரம் கூத்தரசன் தெரு ஜவஹர் பஜார் மக்கள் பாதை மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிளில் சென்று தேமுதிக சார்பில் வாக்கு சேகரித்து தேமுதி கரூர் வேட்பாளர் தங்கவேல் மற்றும் மாவட்டச் செயலாளர் தங்கவேல் மற்றும் கரூர் நகர செயலாளர் காந்தி மேலும் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வந்தனர்.

உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், வீடு வீடாகச் சென்று முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். மற்றும் தோழமைக் கட்சியான அமுமுக நிர்வாகிகள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உடன் வாக்கு சேகரித்தனர்.  


Gallery