அடம்பிடிக்கும் தேமுதிக இறங்கி வருமா அதிமுக ? வெளியான பரபரப்பு செய்தி
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் ஆளும் கட்சியான அதிமுக நேற்றே தொகுதி பங்கீடுகள் பேச்சுவார்த்தையை நடத்தியது.
இதில் பாமகவுக்கு 23 இடங்களும் பாஜகவுக்கு 22 இடங்களும் கொடுக்க ஒப்புதல் அளித்திருக்கிறது. ஆனால், அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வரவில்லை. நேற்று இரவு விஜயகாந்தை நேரில் சந்தித்த அமைச்சர்களிடம், 25 தொகுதிகள் எதிர்பார்க்கப்படுவதாக பிரேமலதா தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதுவரையில் 41 தொகுதிக்கு மேல் கொடுத்தால் தான் கூட்டணியில் இருப்போம் இல்லையென்றால் தனித்து களம் காணுவோம் என கூறி வந்த பிரேமலதா . கடைசியாக 25 தொகுதிகள் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2006ம் ஆண்டு தேர்தலின் போது விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்ததை அடிக்கடி கூறும் தேமுதிக, இந்த முறை அதிமுக கூட்டணியில் பாமகவை விட அதிகமான தொகுதிகள் வழங்க வேண்டுமென தேமுதிக அடம் பிடிக்கிறதாம்.
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதலில் பாமகவை அழைத்ததால் அதிமுகவின் மீது கொஞ்சம் கோபமாக உள்ளதாம் தேமுதிகா.
அதனால், தாங்கள் யார் என்பதை நிரூபிக்க பாமகவை விட அதிக தொகுதிகளை தேமுதிக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.