இதை செய்தால் தமிழ்நாட்டுக்கு லாபம் - கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார்
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சென்னை வந்துள்ளார்.
டி.கே.சிவக்குமார்
சென்னை மணலியில் இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் அவருக்கு விளக்கமளித்தனர். மேலும் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த அவரை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் ஆகியோர் வரவேற்றனர். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மேகதாது அணை
அப்பொழுது பேசிய அவர், "சென்னையில் திடக் கழிவு மேலாண்மை குறித்து பார்வையிட வந்தேன். நாட்டில் திடக்கழிவு மேலாண்மை சவாலானதாக இருந்தாலும், சென்னை மாடல் நன்றாகவே உள்ளது. கடந்த ஓராண்டிற்கு மேலாக தமிழகத்திற்கு வர வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். ஆனால், இப்போதுதான் வர வாய்ப்பு கிடைத்தது.
தற்போது போதிய அளவு மழை பெய்துள்ளதால் மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிக தமிழ்நாடுதான் அதிக பயன் பெரும். தற்போது மழை கர்நாடகாவை விட தமிழகத்தில் நன்றாக பெய்துள்ளது." என பேசினார்.
இதனையடுத்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னை பசுமை சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.