3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம்; தமிழ்நாடு தலையிட கூடாது - டி.கே.சிவகுமார் பதில்
dk shivakumar warns tamilnadu : 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு தலையிட கூடாது என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார்.
கர்நாடகாவில் கொல்லப்பட்ட 3 தமிழர்கள்
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் கர்நாடகா வனத்துறையால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல என தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் விஜய், இந்த படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு இன்று சட்டமன்றத்தில் திமுக, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தலையிட கூடாது
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், "இந்த விவகாரத்தில் தமிழகம் தலையிட கூடாது. எந்த மாநிலமும், மற்ற மாநில விவகாரத்தில் தலையிட கூடாது என அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். மற்ற மாநில விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தங்களுக்கென்று சில சிக்கல்கள் உண்டு. தமிழக தலைவர்கள் யாரும் பிற மாநில விவகாரத்தில் தலையிட முடியாது.
தமிழக சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் நாங்கள் தலையிடுவது இல்லை. இதேபோல் எங்களுடைய சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் பிற மாநிலங்களும் தலையிட கூடாது. கர்நாடகாவை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்" என தெரிவித்துள்ளார்.
சென்னை வரும் கர்நாடக முதல்வர்
ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே காவேரி விவகாரத்தில் சிக்கல் உள்ள நிலையில், தற்போது 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இன்று சட்டமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், "3 தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது. தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது இதில் தமிழ்நாடு தலையிட கூடாது உங்கள் வேலையை பாருங்கள் என கர்நாடக முதல்வர் கூறியுள்ள நிலையில், சென்னையில் ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆம் தேதி தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் டி.கே.சிவகுமாரிடம் இது குறித்து பேசுவாரா என கேள்வி எழுந்துள்ளது.
நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்க முன்மொழிந்தவர்களே அச்சத்தால் எதிர்க்கின்றனர்: பிரபு எம் பி சாடல் IBC Tamil