முதுகுல குத்துற பழக்கம் எனக்கு இல்ல : கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்

Indian National Congress Karnataka
By Irumporai May 16, 2023 05:24 AM GMT
Report

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் டி.கே. சிவக்குமார் டெல்லி புறப்பட்டுள்ளார். 

கர்நாடகா தேர்தல்

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே சிவக்குமார் இடையே போட்டி நிலவி வருகின்றது.

முதுகுல குத்துற பழக்கம் எனக்கு இல்ல : கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் | Dk Shivakumar Said Worked With His Responsibility

முதுகுலகுத்துற பழக்கம்இல்ல 

இந்தநிலையில் இன்று காங்கிரஸ் கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் டெல்லி புறப்பட்டுள்ளார். செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 135 பேரும் ஒரே அணியில் ஒற்றுமையாக உள்ளோம்.

யாரையும் பிளவுப்படுத்த நான் விரும்பவில்லை. யார் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாநில தலைவராக நான் பொறுப்புடன் செயல்படுவேன். நான் யாரையும் முதுகில் குத்துவதோ மிரட்டுவதோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.