திக தலைவர் கி.வீரமணி மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன ?
இந்தியா முழுவதும் மூன்றாம் அலை வேகமெடுத்து வருகிறது. அதேபோல நாட்டிலேயே கொரோனா மூன்றாம் அலையில் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களில் தமிழகம் ஒன்று. தமிழகம் அபாயக் கட்டத்தில் இருக்கிறது.
தினசரி 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டுமே 23 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தான் கொரோனா உச்சம் பெற்றுள்ளது. அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
[GYS0L ]
இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முக்கிய அரசு அதிகாரிகள், சினிமா நடிகர், நடிகைகள் போன்ற பிரபலங்கள் இருக்கிறார்கள்.
இதனால் அவர்களும் எளிதில் தொற்று பாதிப்பு ஆளாகுகின்றனர். அந்த வகையில் தற்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தற்போது கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.