"தாஜ்மகால் அமைந்துள்ள இடம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது" - எம்.பி தியா குமாரி பேச்சால் பரபரப்பு
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அமைந்துள்ள இடம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என்று பாஜக எம்.பி. தியா குமாரி கூறியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, பாஜக எம்.பி.யும், ஜெய்ப்பூர் ராஜ குடும்ப வாரிசுமான தியா குமாரி கூறுகையில், தாஜ்மஹால் அமைந்துள்ள இடம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது, அதற்கான ஆவணங்கள் கூட எங்களிடம் இருக்கிறது. அந்த நிலத்தை ஷாஜகான் கையகப்படுத்தினார். ஆனால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அப்போது எந்த சட்டமும் கிடையாது. அதனால் எங்கள் குடும்பத்தினர் விட்டுக் கொடுத்து விட்டதாகவும், தற்போது தாஜ்மஹால் இருக்கும் இடத்தை எங்கள் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.
எம்.பி. தியா குமாரி கூறியுள்ள இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இந்த நோய் சரியாகும்- யாரெல்லாம் சாப்பிடலாம்? Manithan
