1,00,000 பட்டாசுகளால் காரை மூடி தீ வைத்த Youtuber - வைரலாகும் வீடியோ...!

Youtube Viral Video
By Nandhini Oct 26, 2022 05:39 AM GMT
Report

தீபாவளியையொட்டி 1,00,000 பட்டாசுகளால் காரை மூடி தீ வைத்த Youtuberரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ண, வண்ண உடைகள் உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து உலகம் முழுவதும் தீபாவளியை மக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடந்த சில வாரங்களாக தீபாவளியையொட்டி கடைகளில் பட்டாசு விற்பனையும், புத்தாடை விற்பனையும் சூடு பிடித்தது. துணி கடைகளில் மக்கள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

காரில் பட்டாசுகளை கட்டி வெடிக்கச் செய்த Youtuber

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தீபாவளிக்கு முன்னதாக, youtuber ஒருவர் 1,00,000 பட்டாசுகளை காரை சுற்றி கட்டி வைத்து Happy Diwali என்று கூறி அந்த பட்டாசுகளை தீ வைத்து வெடிக்க வைத்தார்.

கார் முழுவதும் பட்டாசுகள் பட்... பட்.. என்று சரவெடியாய் வெடித்துச் சிதறியது. இதை வீடியோவாக எடுத்து அந்த Youtuber சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்.. யாரு சாமி நீ..., இப்படியெல்லாம் ஏண்டா.. பண்றீங்கன்னு... கண்டமேனிக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். 

diwali-youtuber-firecrackers-car-on-fire