தீபாவளி பண்டிகை: சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

Diwali
By Fathima Sep 06, 2026 09:03 AM GMT
Report

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து செல்வோருக்கான விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.

நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது, இதற்காக சொந்த ஊருக்கு செல்லும் வகையில் விரைவு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

நவம்பர் 5ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தது.

நவம்பர் 6ம் தேதிக்கான பயண முன்பதிவு நாளையும், நவம்பர் 7ம் தேதிக்கான பயண முன்பதிவு நாளை மறுதினமும் நடைபெறும்.

தீபாவளி பண்டிகை: சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள் | Diwali Ticket Booking Sold Out In Minutes