தீபாவளி அன்று அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை வெடிக்கக் கூடாது - தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம்
தீபாவளி அன்று அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை வெடிக்கக் கூடாது என்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை
வரும் 24ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள். சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால், மக்கள் அரசு பஸ்களை நாடி ஆன்லைனில் பதிவு செய்து வருகிறார்கள்.
சரவெடிகளை வெடிக்கக் கூடாது
இந்நிலையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளது.
இது குறித்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், பட்டாசுகளை தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய, அதிக ஒலி எழுப்பும் சர வெடிகளை தவிர்க்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு அறிவுறுத்தியுள்ளது.