சொந்த ஊர் திரும்பும் மக்கள்: சென்னையில் நீங்கள் செல்ல வேண்டிய பேருந்து நிலையம் இதுதான்..

tngovernment diwalispecialbuses
By Petchi Avudaiappan Nov 02, 2021 01:40 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தீபாவளி பண்டிகை கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்பட தொடங்கியுள்ளனர். 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை என களைக்கட்டும் என்பதால் வணிக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இதனிடையே சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை நேற்று முதல் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையையில் மாதவரம், கே.கே. நகர், பூந்தமல்லி, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலையம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சென்னை புறநகா் பகுதிகளில் உள்ள மற்ற 5 பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது.

பேருந்து முன்பதிவிற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகளும், கே.கே. நகா் பேருந்து நிலையம்: இசிஆா் வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 

அதேபோல் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம்: திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்: திண்டிவனம் மாா்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூா், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னாா்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் புறப்படுகின்றன. 

பூந்தமல்லி பேருந்து நிலையம்: வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையம் மேற்குறிப்பிட்டுள்ள ஊா்களைத் தவிர, இதர ஊா்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, மாா்த்தாண்டம் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூா், திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா் மற்றும் பெங்களூரு ஆகியவைகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.