நெருங்கும் தீபாவளி - நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 89,932 பேர் வெளியூர் பயணம்
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து ஒரேநாளில் 89,932 பேர் வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வரும் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக போக்குவரத்து கழகம் நேற்று முதல் 2,100 பேருந்துகள் உடன் கூடுதலாக 1,785 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்திலிருந்து முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இரண்டு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்ட நிலையில் இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தீபாவளி சிறப்பு பேருந்துகளில் நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 89,932 பேர் வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.