நெருங்கும் தீபாவளி - அரசு பேருந்தில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!
அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி வியாழக்கிழமை வருவதால் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கும். இதனால் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் ரயில்களில் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். அத்துடன் சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு முன் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் ,திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் அதிகம் பயணம் செல்வர் என்பதால் கடந்த ஆண்டைப் போல 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் சிறப்பு பேருந்துகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.