தீபாவளிக்கு அடுத்தநாள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

Holiday Diwali Govt Announce Next Day
By Thahir Nov 01, 2021 09:15 AM GMT
Report

தீபாவளிக்கு அடுத்தநாள் நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 4 -தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று

விழாவினை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 5-ம் தேதி  வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் அரசுக்கு வரப்பட்டனர்.

அக்கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அதனை ஈடு செய்யும் வகையில் அதனை ஈடு செய்யும் விதமாக மூன்றாம் சனிக்கிழமையான 20.11.2021 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.