திபாவளியொட்டி கூடுதல் தளர்வுகள்? - முதல்வர் ஆலோசனை: என்னென்ன தளர்வுகள்?
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்துவருவதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வார தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
மேலும், வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையையொட்டி புதுத்துணிகள், பட்டாசுகள், இனிப்புகள் என ஆங்காங்கே கூட்டம் கூட தொடங்கியுள்ளனர்.
இதனால் கூடுதல் தளர்வுகள் அளிப்பதா கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.