தீபாவளி மதுவிற்பனை; 3 நாட்களில் ரூ.708 கோடி வசூல்

Diwali
By Thahir Oct 25, 2022 04:13 AM GMT
Report

தீபாவளியையொட்டி டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனையானது ரூ.708 கோடியை தொட்டு சென்ற ஆண்டு சாதனையை முறியடித்துள்ளது.

ரூ.700 கோடிக்கு மது விற்பனை

தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களின் போது டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை என்பது அமோகமாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் கடைகளில் விற்பனையானது அமோகமாக நடைபெற்றது.

Diwali Liquor Sale; 708 crore collection in 3 days

இந்த ஆண்டு தீபாவளி தினமான நேற்று தமிழகத்தில் ரூ.244.08 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.708.29 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.154 கோடி..திருச்சி மண்டலத்தில் ரூ.140 கோடி , சேலம் மண்டலத்தில் ரூ.142 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.139 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.133 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.